சோர்வாகமல் படிப்பது எப்படி ??
நீங்க எல்லாரும் ஏதாவது ஒரு தேர்வுக்காக உங்களை தயார்
செஞ்சுட்டு இருக்கீங்க அப்படித்தானே. சில பேர் ஏதாவது என்ட்ரன்ஸ் தேர்வுக்காகவோ
இல்ல கவர்மெண்ட் எக்ஸாம்ஸ்காகவும் ஸ்கூல் எக்ஸாம்ஸ்காகவும் தயாராகிட்டு
இருப்பீங்க.
அதுக்காக நல்லா படிக்கணும் தினமும் நினைச்சிருப்பீங்க.
ஆனா அது முடியாம போயிருக்கும் அப்போ உங்களுக்கான போஸ்ட் தான்
இது.
கவன சிதறல் ஏற்படாம நிறைய நேரம்
படிக்கிறதுக்காக பத்து டிப்ஸ் தான் இன்னைக்கு பாக்க போறோம்.
இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்னு நம்புறேன்.
1.
ஏன்??
நம்ம ஏன் இந்த தேர்வுக்காக தயார் பண்ணிக்கணும். இதனால நாம் அடையப்போறது
என்ன? அப்படின்னு நீங்க உங்களையே முதல்ல
கேட்டுக்கணும். மற்ற சிலரைப் போல சுமாரா இருந்தா போதும்ல
ஃப்ரீயா இருக்கலாம் இல்ல .. ஆனா அதையும் மீறி நான் அடைய விரும்புவது என்ன??? அப்படின்னு நீங்களே உங்க கிட்ட கேளுங்க.
அது சில டைம்ஸ்
உங்க நீண்ட நாள் கனவாக இருக்கலாம்… இல்ல ஏதாவது எமோஷனலாக ஒரு காரணமாக இருக்கலாம்!!
இதுதான் உங்க முதல் மோட்டிவேஷன். கவன சிதறல் ஏற்படும் போது முதல்ல உங்க நினைப்புக்கு வர
வேண்டிய கேள்வி இதுதான்.. ஏன் நான் நல்லா படிக்கணும்
??? என்ன அச்சீவ் பண்றதுக்காக அப்படின்ற கேள்வி
2.
திட்டம்
திட்டம் வகுப்பது
அப்படின்றது ரொம்ப முக்கியமான விஷயம். எந்த
சப்ஜெக்ட் முதல்ல படிக்கணும்… எவ்வளவு நேரம் அதுக்கு ஒதுக்கணும்… எப்போ ரிவைஸ்
பண்ணனும் எல்லாமே நீங்க பிளான் பண்ணனும். டைம் மிச்சம் ஆகும் .இதனால் எல்லா சப்ஜெக்ட்ஸும் கவர் பண்ண முடியும்,
அதனால ஸ்ட்ரெஸ் குறையும். சிலபஸ் பாத்துக்கணும் அதுபடி தான் போரோமா அப்படின்னு
செக் பண்ணிக்கணும்… இல்லையா?
முதல்ல கஷ்டமான சப்ஜெக்ட்ஸ படிக்கத் தொடங்கணும். அப்போ
நமக்கு நிறைய எனர்ஜியும் இருக்கும் அதுக்கப்புறம் ஈஸியான சப்ஜெக்ட்ஸ் படிச்சா
டயர்டா ஃபீல் பண்ண மாட்டோம். இதுவே உங்க எனர்ஜியை ஒழுங்கா பயன்படுத்த உதவும் !!
அதுவும் இல்லாம .. ஒரு பெரிய டாஸ்க் முடிச்ச மாதிரி
உங்களுக்கு ஒரு திருப்தியும் கிடைக்கும்.
3.
சூழல்
நம்ம படிக்கிற இடத்தை
கிளீனா வெச்சிருக்கணும். உட்காரும்போது அது ஒரு நல்ல ஃபீல் தரும் அப்படி படிக்க ஆரம்பிக்கும் போது நல்ல பாசிட்டிவ்
வைப்ஸ் கொடுக்கும் .அதுவும்
உங்களுடைய படிக்கிற நேரத்தை கூட்டும்.
4.
இடைவேளை
ஒரே ஸ்ட்ரெட்ச் படிச்சா
கொஞ்சம் போர் அடிக்க தான் செய்யும் அதனால இடையில கொஞ்சம் பிரேக்ஸ் எடுத்துக்கலாம்.
ஆனா அந்த பிரேக்ஸ் புத்திசாலித்தனமா தேர்வு பண்ணுங்க. கொஞ்ச
வருஷங்களுக்கு முன்னாடி மொபைல் யூஸ் ரொம்ப இல்ல…
ஆனா இப்போ பிரேக் ன்னு சொன்னாலே மொபைல் தான் நினைவுக்கு
வருது .ஆனா அதுக்குள்ள போயிட்டீங்கன்னா டிஸ்ட்ராக்ட்
ஆயிடுவீங்க. அதனால கொஞ்சம் புத்திசாலித்தனமா செலவிடுங்க!!
வீட்ல இருக்குற pets கூட கொஞ்ச நேரம் விளையாடுங்க இல்லன்னா கொஞ்சம்
நடந்துட்டு வாங்க. ஏதாவது ரிஃப்ரெஷிங்கான ஜூஸ் அல்லது ஸ்நாக்ஸ் சாப்பிடலாம். இப்படி பண்ணீங்கன்னா நல்லா இருக்கும்
5.
நினைவூட்டல்கள்
அதாவது நீங்க இருக்கிற
ரூம்ல உங்களுடைய குறிக்கோள் அடைய முயற்சி செய்கிற மாதிரியான
வால்பேப்பர்ஸ் ஒட்டலாம். அத
பார்க்கும்போது உங்களுக்கு அந்த லட்சியம் முன்னாடி கண்ணில் வரும் அந்த ஒரு மோட்டிவேஷன் உங்கள படிக்க
தூண்டும் . அதனால் அந்த மாதிரி
உங்க ரூம்ல அல்லது டேபிள்ல அப்படி
எல்லா இடத்திலும் ஒட்டி வைக்கலாம்.
6.
பல பாடங்கள் ஒரு நாள்
ஒரு நாளைக்கு ஒரே சப்ஜெக்டை படிச்சிட்டு
இருந்தீங்கன்னா கண்டிப்பா டயர்டா ஃபீல் பண்ணுவீங்க. நிறைய பேர் செய்ற மிஸ்டேக்
இதுதான் இப்போ முதல்ல மேக்ஸ் எடுக்குறீங்கனா அடுத்தது லாங்குவேஜ் மாதிரி ஈஸியா
ஏதாவது தேர்வு பண்ணுங்க!
இப்படி பண்ணும் போது நீங்க சிலபஸ்ஸ சூப்பரா கவர் பண்ண முடியும்.. டயர்ட் ஆகாமலே
.
7.
வடிவம்
கொரோனா வந்ததுக்கு
அப்புறம் எல்லாமே ஆன்லைன் ஆயிடுச்சு. படிக்க வேண்டிய pdf பைல்ஸ் பிரிண்ட் எடுத்தோ அல்லது புத்தக வடிவமாகவோ எடுத்து படிச்சு பாருங்க கண்டிப்பா
அது பெட்டர் பீல் தரும். முக்கியமான விஷயங்களை அதுல குறிச்சிக்கலாம்!!
மொபைல் தான் உங்கள
டிஸ்டர்ப் பண்ணதுன்னா? மெசேஜ் வருகிற நோட்டிபிகேஷன் சவுண்டை மியூட் பண்ணுங்க. தேவை இல்லாத ஆப்ஸ் எல்லாமே பிளாக்
பண்ணுங்க இதெல்லாம் உங்க குறிக்கோளை
அச்சீவ் பண்றதுக்கு கண்டிப்பாக உதவும்
8.
ஒருங்கிணைந்து படிக்கவும்
இது எல்லாருக்கும் உதவுமா
அப்படின்னு கேட்டா இல்ல. ஆனா சில பேர் குரூப் ஸ்டடி பண்ணும்போது டவுட்ஸ் எல்லாம்
கிளியர் ஆகும். யாரு சொல்லி குடுக்குறாங்களோ அவங்களுக்கும் அது ஆழமா பதிஞ்சுரும் குரூப்ஸ்
ஸ்டடி பண்றவங்களுக்கு அது ஒரு பிளஸ்
9.
ஆரோக்கியம்
படிக்கிறத விட ரொம்ப முக்கியமானது நம்முடைய
ஆரோக்கியம் தான். நிறைய பேரு பாத்திருக்கேன் ராத்திரி முழுவதும் தூங்காம
படிப்பாங்க ..அப்படி பண்ண கூடாது. தேவையான அளவு தூக்கம் ஒரு உடலுக்கு ரொம்ப தேவை. அப்போதான் மூளை நல்ல
சுறுசுறுப்பாக செயல்படும். ராத்திரி முழுவதும் உட்கார்ந்து படிச்சா எக்ஸாம் அப்போ
ஹெல்த் பிரச்சனைகள் வரும். அதுபோல
நல்ல உடல் பயிற்சி செய்யணும்.
ஹெல்தியான உணவுகள் சாப்பிடணும்.
முடிஞ்சா தியானம் செய்யலாம்!! இதெல்லாமே
டைரக்ட்டாவே உங்களுடைய மூளை திறனுக்கு நல்லது
10.
வெகுமதி
நீங்க உங்களையே மோட்டிவேட் செய்துக்கணும் !! பரவால்ல நான் எல்லாமே ஒழுங்கா
ஃபாலோ பண்றேன்… நல்ல படிக்கிறேன் அப்படி நீங்களே உங்களை மோட்டிவேட் பண்ணிக்கோங்க அது ஒரு நல்ல எனர்ஜியை
தரும்.
எஃபக்டிவ்வா படிச்சு ஜெயிக்கிறதுக்கு அழகான பத்து டிப்ஸ்
பார்த்தோம் உங்களுக்கு யூஸ்ஃபுல்லா
இருக்கும் என்று நம்புகிறேன்.