ஹாய் பிரண்ட்ஸ்,
டிசிப்ளின் அப்படின்னா என்னன்னு எல்லாருக்கும் தெரியும். ஓழுங்கு முறையோடு வாழ்வது .. அப்படின்னு தமிழ்ல சொல்லுவோம். டிசிப்ளினை பின்பற்றினால் வாழ்க்கையில் வெற்றி பெறுவோம் அப்படின்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்.
ஆனாலும் அதை ஒழுங்கா பின் பற்றுவது கிடையாது. ஆனா மிலிட்டரி ஆபிஸர்ஸ் பாத்தீங்கன்னா பயங்கரமா டிசிப்ளினை ஃபாலோ பண்ணுவாங்க. நம்ம நம்ம கூட யாராவது ஸ்ட்ரிக்டா விஷயங்களை ஃபாலோ பண்ணா …ஹப்பா மிலிட்டரி ஆஃபீஸ் மாதிரி பண்றாங்க அப்படி தானே சொல்லுவோம்? அவங்களால முடியுது ஆனா ஏன் நம்மளால அது முடியல?
10 Rules followed by Military officers
ஏன்னா அவங்களுக்கு கொடுக்கிற முதல் பாடமே ப்ரகாஸ்டினேஷன், சோம்பேறித்தனம், கவன சிதறல் இது எல்லாத்தையும் போக்கக்கூடிய ஒரு அருமையான தந்திரம்…. அதுதான் டிசிப்ளின் அப்படின்னு அவங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்!
அதனாலதான் அவங்களால அப்படி இருக்க முடியுது. நம்ம அந்த ரகசியத்தை எப்படி ஃபாலோ பண்றது அப்படின்னு தான் இன்னைக்கு இந்த போஸ்ட்ல பாப்போம்.
டிசிப்ளினோட உண்மையான அர்த்தம் பலருக்கும் தெரியாது.
டிசிப்ளினான லைஃப் வேணும்னா என்ன செய்யலாம் ???
அதுக்கு மூணு விஷயம் ஃபாலோ பண்ணனும் அதை முதல்ல பாப்போம் .
1.மோட்டிவேஷன்
மோட்டிவேஷன் ரொம்ப முக்கியமான விஷயம். ஏன்னா உங்களுக்குள்ள அந்த உந்துதல் வந்தா தான், எந்த ஒரு விஷயமும், சின்னதோ.. பெருசோ அதை சாதிக்க முடியும்!!
நீங்க ஒரு மோட்டிவேஷன் வீடியோ பார்த்ததும்…. ஒரு ஃபீல் வரும் அந்த .பாக்கி வேலைகளை உடனே செய்யணும் அப்படின்னு சீக்கிரமா செய்வோம். அந்த மாதிரி செல்ப் மோட்டிவேஷன் வேண்டும்
How to study for long hours without distractions?
2. மன உறுதி
எதையும் செய்றதுக்கு ஒரு மன உறுதி வேணும். எதையாவது படிக்கவோ வேலை செய்யவோ தோணும் போது…. சோம்பேறித்தனமோ இல்ல அதுக்கான மனம் இல்ல.. அப்படின்னு உங்க இன்னொரு மனசு தடுக்குமே, அத தோற்கடிச்சு இல்ல…. கண்டிப்பா நான் அதை செய்வேன் அப்படின்னு நினைக்கிற அந்த ஃபீலிங் தான் உங்க மன உறுதி.
அந்த வில் பவர் இருந்துச்சுன்னா உங்களால எதையுமே சாதிக்க முடியும்.
3. டிசிப்ளின்
இது மோட்டிவேஷன் இல்லை வில் பவர் மாதிரி பீலிங் சம்பந்தப்பட்டது கிடையாது. இப்போ உங்களுக்கு ஒரு விஷயம் செய்ய மனமில்லாமலோ , மோட்டிவேஷனும் இல்லாத போதும் ,அந்த வேலையை செய்வது தான் டிசிப்ளின்!!!
இப்போ நீங்க ஒரு ஜிம்முக்கு சேர்ந்து இருக்கீங்க ன்னு வச்சுக்கோங்க. முதல்ல நாலஞ்சு நாட்கள் மோட்டிவேஷன், வில் பவர் இதுக்காக போவீங்க. சில நாட்கள் கழிச்சு உங்களுக்கு இது ரெண்டுமே குறைஞ்சு போச்சுன்னா, இந்த டிசிப்ளின் அப்படின்ற விஷயத்தை மனசுல எடுத்துக்கணும்!!
எனக்கு போக முடியல, செய்யணும்ன்ற மோட்டிவேஷனும் இல்லை ஆனா நான் ஒரு டிசிப்ளினான ஆளு அதனால கண்டிப்பா போவேன் அப்படின்னு உங்களுக்குள்ளே நீங்க நினைச்சுகிட்டு போகிறது தான் டிசிப்ளின்.
எப்படி… அந்த செல் டிசிப்ளின் நமக்குள் கொண்டு வருவது அப்படின்னு பார்ப்போம்????
இப்போ மிலிட்டரில எல்லாம் டிசிப்ளினா இருப்பதற்கு மூன்று விஷயங்களை பின்பற்றுவாங்க .அதுப்படி நாமும் செஞ்சா, நம்முடைய நாள் ப்ரொடக்டிவ் மற்றும் டிசிப்ளேண்டாவும் இருக்கும்.
1
இந்த உலகத்துல முக்கால்வாசி நபர்களும் காலையில் எழுந்திருக்கிறதுக்கு ஒரு சின்ன சோம்பல காட்டுவாங்க. ஆனால் காலைல முதல் விஷயமா அந்த சோம்பல போக்கி எழுந்திருக்க ஆரம்பிச்சிட்டீங்கனாலே, முதல் வெற்றி அதுதான்!!
அதுவே ஹப்பா இன்னிக்கு நினைச்ச மாதிரி சீக்கிரம் எழுந்து விட்டோம் அப்படின்னு பாசிட்டிவா தோணும். எழுந்த உடனே எல்லா வேலைகளையும் செய்ய சொல்லல… ஆனா அந்த நாள் முழுவதும் ஒரு பாசிட்டவான ஃபீல் கண்டிப்பா அது கொடுக்கும்.
எக்ஸ்ட்ரா நேரம் கிடைக்கும் உங்க வேலைகளை செய்ய..!! அவசர அவசரமா எதையுமே செய்ய வேண்டியதா இருக்காது.
2
இப்ப நம்ம எல்லாருக்கும்…. வீட்ல இருக்கும் மனைவிக்கோ, வேலை செய்யும் நபர்களுக்கோ, ஸ்கூல்ல போகும் பிள்ளைகளுக்கோ … எல்லாருக்குமே ஒரு வேலை அவங்க செய்ற மாதிரி இருக்கும். சில நேரம் அதை செய்யும் மூடு இருக்காது, ஆனா இன்னிக்கு இல்லனாலும் நாளைக்கு ஆனாலும் அத நீங்க செஞ்சு தான் ஆகணும் அப்படி என்று கட்டாயம் இருக்கும்.
அதனால அந்த மாதிரி வேலையை கட்டாயம் முடிக்க கத்துக்கணும். அதுவே உங்கள டிசிப்ளின்டா மாத்தும் இது. என்னோட வேலை இது , கண்டிப்பா செய்யணும் அப்படின்னு செய்வது தான் டிசிப்ளின்!!
நாளைக்கு என்று மாற்றி வச்சா அங்கு சோம்பேறித்தனம் ஜெயிக்குது. ஆனால் நீங்கதான் ஜெயிக்கணும் அதுதான் டிசிப்ளின்.
3
காலையில எழுந்ததும் கொஞ்ச நேரம் உடற்பயிற்சிகக்காக கண்டிப்பா நீங்க நேரம் ஒதுக்கணும். மூச்சு பயிற்சியோ இல்ல உடற்பயிற்சியோ செஞ்சு பாருங்க கண்டிப்பா புத்துணர்ச்சி கிடைக்கும் .
சோம்பல் பட்டு செய்யாம விட்டுட்டீங்கனா நீங்க உங்கள டிசிப்ளிண்டா மாத்த முடியாது.
நான் காலையில சீக்கிரமா எழுந்திருப்பேன், கொஞ்ச நேரம் உடற்பயிற்சி பண்ணுவேன், என்னுடைய வேலைகளை சரிவர செய்வேன்…… பிடிக்குதோ பிடிக்கலையோ, நான் இதை செய்வேன், அப்படின்னு 21 நாட்கள் செஞ்சு பாருங்க. அதுவே உங்களுக்கு பழக்கமா மாறி போயிரும்.
எங்க இருந்து இந்த டிசிபிளின் வரும்???
மிலிட்டரி னா மேலதிகாரிகள் கொடுக்கிற பிரஷர், அதனால கண்டிப்பா அந்த ரூல்ஸ் படி எல்லாருமே நடப்பாங்க. அப்படியே பழகி பழகி ரிட்டயர்ட் ஆனதுக்கப்புறம் கூட மிலிட்டரி ஆபிஸர்ஸ பார்த்தீங்கன்னா டிசிப்ளேண்டாவே இருப்பாங்க. அதுதான் பழக்கம்!!
பிரஷர் இல்ல சுகமா இருக்கலாம். ஆனாலும் அவங்களோட டிசிப்ளின் அவங்கள அப்படி வாழ வைக்கிறது.
அப்போ நீங்க நினைக்கலாம், என்னடா பிடிக்குதோ, பிடிக்கலையோ செஞ்சுதான் ஆகணும்னா தண்டனைப் போல நான் செய்யணுமா???? அப்படின்னா அது தான் டிசிப்ளினா ?? டிசிப்ளின் என்ன பனிஷ்மென்ட்டா??? டிசிப்ளின் தண்டனை கிடையாது. அது சுதந்திரம்!!
நீங்க உங்க வாழ்க்கையில அச்சீவ் பண்ண நினைப்பது டிசிப்ளினா இருப்பதன் மூலம் ஈஸியா அடைஞ்சிடலாம். உங்க படிப்போ வேலையோ அழகாக செய்து முடிப்பதன் மூலம் வாழ்க்கையில் ஜெயிக்கப் போவது நீங்கதான்.
நீங்க நினைச்ச வாழ்க்கையை அச்சீவ் பண்ண உதவி மட்டுமே செய்யும் இந்த டிஸ்ப்ளின் .