...

ஒரே சோர்வாகவே இருக்கு .. ஒண்ணுமே செய்ய தோணல .. இதை எப்படி மாற்ற வேண்டும்???

காலைல எழுந்ததும் ஒரு புத்துணர்வு இல்லாம சோர்வா இருப்பது  பல பேரும் சந்திக்கிற ஒரு பிரச்சனை தான். இது சின்ன பசங்க கிட்ட கூட இருக்கிறத பார்த்திருப்போம்! காலையில அவர்களை எழுப்பி ஸ்கூலுக்கு விடுறதுக்குள்ள   அப்பா….. எவ்வளவு போராட்டம்??? பெரியவங்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்யுது.

 

       எழுந்ததுக்கு அப்புறமும் சேர்ல போய் உட்காருவது! வேலை இருக்குன்னு தெரிஞ்சாலும் மூளை சுறுசுறுப்பாக செயல்பட மறுப்பது…. இதுக்கு “ஸ்லீப் இனர்ஷியா” அப்படின்னு சொல்லுவாங்க. இது சோர்வாக இருப்பது மட்டுமில்ல… லேட் ரியாக்சன் அதாவது… ஏதாவது ஒரு கேள்வி கேட்டா கொஞ்ச நேரம் ஆகும் இவங்களுக்கு பதில் சொல்றதுக்கு!! ஏன்னா மூளை அவ்வளவு சுறுசுறுப்பா வேலை செய்யாது. 

எதுனால இப்படி ஆகுது: 

insomnia

1.   முக்கியமான காரணம் என்னன்னு பார்த்தா, எந்த தடங்கலும் இல்லாம தூங்கி எழுந்திருச்சா இந்த மாதிரி நடக்காது! ஆனா இடையில ஒன்று, இரண்டு தடவை நமக்கே தெரியாமல் தூக்கம் டிஸ்டர்ப் ஆச்சுன்னா நெக்ஸ்ட் நாள் இந்த மாதிரி ஆயிடும். இது அடினோசில் அப்படின்ற ஒரு நியூரோடிரான்ஸ்மிட்டர் ,  நரம்பு மண்டலத்தை சூழும் போது இந்த மாதிரி நடக்கும். 

1.    இப்போ நீங்க அலாரம்  வச்சுட்டு… வெச்ச அந்த டைம்ல எழுந்தீங்க அப்படின்னா  பிரச்சனை இல்லை.. ஆனா அத snooze  பண்ணிட்டு திருப்பியும் தூங்கிட்டீங்கனா  மூளை சோர்வாகிடும்.

2.   லேட் ஆக தூங்குறங்களுக்கும் இந்த “ஸ்லீப் இனர்ஷியா”  பிரச்சனை வரும் .அதுவும் இல்லாம தினமும் தூங்குற நேரம் மற்றும் எழுந்திருக்கும் நேரத்தை மாற்றி மாற்றி செய்தாலும் இந்த ஸ்லீப் இனர்ஷியா பிராப்ளம் வரும்.

3. நைட் டியூட்டி செய்றவங்களுக்கு தான் இந்த பிரச்சனை ரொம்ப பாதிக்குது. வேலை நிமித்தமா அவங்க தூங்காம இருந்தாலும் விடியற்காலை நாலு மணிக்கு மேல அவங்க கண்கள் முழிச்சிருந்தாலும் மூளை தூங்கிட்டு சோர்வாக இருக்கும்

snoring

4.   குறட்டை விடுறவங்கள பார்த்து நாம நினைப்போம் அவங்க நல்லா தூங்குறாங்க அப்படின்னு நினைப்போம். ஆனா உண்மை அது இல்ல மூளைக்கு கரெக்டா ஆக்சிஜன் போகாததுனால கஷ்டப்பட்டு அவங்களுக்கே தெரியாம ஸ்வாசிச்சிட்டு இருப்பாங்க. அதனாலயே திடீர் திடீர்னு முழிப்பாங்க. இதனால தூக்கம்  டிஸ்டர்பன்ஸாகி ஸ்லீப் இனர்ஷியா வரும். குறட்டை பல காரணங்களால் வரும்.. பிசிட்டி, பிபி வேரியேஷன், சுகர் இந்த மாதிரி பல காரணங்கள் இருக்கு. குறட்டை விடுற பல பேர பார்த்தீங்கநன்னா   காலையில் எழுந்த பிறகும் சேர்ல.. அங்க இங்க அப்படின்னு உட்கார்ந்து கொண்டே  தூங்குவாங் .

5.   தப்புன்னு தெரிஞ்சும் சில பேர் குடிப்பழகத்திற்கு அடிமையாக இருப்பாங்க இதை ஹங்கோவர்னு சொன்னாலும் மூளையை சோர்வாக்கிற “ஸ்லீப் இனர்ஷியா” தான் இதுக்கும் காரணம் .

6.   மாத்திரைகளும் சிலவகை மருந்துகளும் இதே மாதிரி “ஸ்லீப் இனர்ஷியா” உண்டு செய்யும்.

        காரணங்களை பார்த்தாச்சு இனி அதற்கான தீர்வுகளையும் பார்ப்போம்!!

1.       ஒரே சமயத்துல தூங்கவும் எழுந்திருக்கவும் நம்ம பழகிக்கணும். இது இந்த பிரச்சினையை வெகுவாக குறைக்கும்.

2.        ப்ளூ லைட் ரேடியேசன் தர கருவிகளை குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு முன்னே பார்ப்பது நிறுத்தி விடணும். ஏன்னா இதுவும் நமக்கு REM ஸ்லீப் அப்படின்னு சொல்லப்படுகிற டீப் ஸ்லீப் ஆக்டிவிட்டியை கெடுக்கும்.

3.        ட்ரிங்க்ஸ் பண்ணவே வேண்டாம் அப்படியே பண்றதுனாலும் ஈவினிங் மேல ட்ரிங்ஸ் பண்ணாம இருந்தா நெக்ஸ்ட் நாள் ஃப்ரெஷ்ஷா எழுந்திருக்கலாம்.

4.       காப்பி சுகர் இல்லாம காலைல குடிக்கும் போது நம்ம ஏற்கனவே சொன்னோம்ல  அடினோசில்  அப்படின்ற அந்த நியூரோடிரான்ஸ்மிட்டர் பிளாக்கேஜ இது மாத்தி நல்ல ரெப்ரெஷ்மென்ட் கொடுக்கும் .

5.        காலையில் எழுந்ததும் சன் லைட் உங்க மேல பட்டாலே. கார்டிசோல் ரெஸ்பான்ஸ் அப்படின்னு சொல்லுவாங்க.. நம்ம ஐஸ்ல இருக்கிற  ரெட்டினாவில் சன் லைட் ..டும்போது சீக்கிரமாவே ஒரு ரெப்ரேஷன் கிடைக்கும்.

6.        அலாரம் வைக்கிற பழக்கம் இருந்துச்சுன்னா ஃபர்ஸ்ட் டைம் அடிக்கும் போது எழுச்சிருங்க. Snooze  பிரஸ் பண்ணீங்கன்னா உங்க மூளையை அது திருப்பியும் சோர்வாக்கிடும் .

இவைகளை பின்பற்றி இந்த பிரச்சனையை

 

சரியாக்கலாம் . 

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.