ஹாய் பிரண்ட்ஸ்,
அமைதியாக இருக்கிறவங்களை பத்தி நமக்கு எப்பவுமே பல தவறான கண்ணோட்டங்கள் இருக்கும். அவங்க ரொம்ப வெட்கப்படுறவங்க, தன்னம்பிக்கை கொஞ்சமும் இல்லாதவர்கள் அப்படின்னு நம்ம நினைப்போம்.
ஆனா அது எல்லாருடைய விஷயத்திலும் சரியா இருக்கணும் அப்படின்னு கிடையாது. சில பேர் அடுத்தவங்க பேசுவதை நல்ல கவனிச்சு அதன் பிறகு பேசுபவர்களாகவும் இருக்கலாம்.
இன்னைக்கு நாம பார்க்கப் போறது அந்த மாதிரி அமைதியாக இருக்குறவங்கள பத்தி 8 ஸ்வரஸ்யமான குணங்கள் தான் .
8 குணங்கள் :
1. அமைதியாக இருக்குறவங்க முக்கால்வாசி பேரும் நல்லா பொறுமையாக கேக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பாங்க.
நீங்க சொல்றத அவ்வளவு பொறுமையா கேட்பாங்க .இப்போ உங்களுக்கு, ரொம்ப நாளா மனசுல ஒரு பிரச்சனை மனச போட்டு அழுத்திக்கிட்டு இருக்குன்னு வச்சுக்கோங்க… அதை தைரியமா இந்த மாதிரி நபர்களிடம் ஷேர் பண்ணலாம். ஏன்னா அந்த நேரம் இந்த மாதிரி நபர்களோடு நம்ம ஷேர் பண்ணா அவங்க அதற்கு நல்ல ஒரு ஆறுதல் மற்றும் கருத்துக்களை பகிர்வாங்க.
2. மற்றவர்களை காட்டிலும் ரொம்ப சென்சிட்டுவா இருப்பாங்க. இவர்கள் , சுற்றி இருக்கிற விஷயங்களை நல்லா நோட் பண்ணக்கூடிய திறனும் இவங்களுக்கு இருக்கு.
3. பல ஆராய்ச்சிகளும் நிறுப்பிச்ச ஒரு விஷயம் என்னன்னா, பல கலைஞர்கள், எழுத்தாளர்கள் எல்லாரும் அமைதியான நபர்களாக தான் இருப்பாங்க.
நம்ம முன்னாடி சொன்ன மாதிரி, இவங்களோட உற்று ஆராய்ந்து நோக்கும் திறன் தான் இந்தத் திறமைகளை இவங்களுக்கு தருவது . அதே மாதிரி ப்ராப்ளம் சால்விங் கெப்பாசிட்டியும் இவங்களுக்கு அதிகம்.
இவங்க பேசி நேரத்தை வீணடிக்காமல் தங்களுடைய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பாங்க.
4. அமைதியான நபர்கள் நேருக்கு நேர தனி நபரோடு பேச விருப்பப்படுவாங்க. குரூப்ல பேசுறதுக்கு விருப்பப்பட மாட்டாங்க. தனியாக பேசும் போது நல்ல கான்சன்ட்ரேஷனோட அடுத்தவங்க பேசுவதையும் கேப்பாங்க. தாங்களும் தங்களுடைய கருத்தை சொல்வாங்க.
குரூப் சில நேரம் பாத்தீங்கன்னா, சில பேர் அவங்கள பத்தியே பேசிக்கிட்டே இருப்பாங்க. இது இந்த மாதிரி நபர்களுக்கு பிடிக்காது.
ஏன் குரூப்ல பேச மாட்றீங்க அப்படின்னு கேட்டா, எனக்கு சென்டர் ஆஃப் அட்ராக்ஷனா இருப்பது இஷ்டமில்லை அப்படின்னு சொல்லுவாங்க.
5 ஏற்கனவே சொன்ன மாதிரி இவங்க வெட்கப்பட்டு பேசாமல் இருப்பதில்லை. தங்களை சுற்றி நடப்பது பயங்கரமா அப்சர்வ் பண்றவங்களாக இருப்பாங்க. வேலையிலோ, ஸ்கூல்லையோ பேச வேண்டிய இடத்துல கரெக்டான பாயிண்ட் மட்டும் பேசுவாங்க.
6. அமைதியான நபர்கள் சென்சிடிவ் தான், ஆனா தங்களுடைய கோபத்தை வெளியில சட்டுனு விட்ர மாட்டாங்க. சொற்களை கடகடன்னு உதிர்த்திட மாட்டாங்க. நல்லா கண்ட்ரோல் செஞ்சுப்பங்க. இவங்களுக்கு எதுக்குமே கொஞ்சம் நேரம் ஆகும்.
இப்ப ஏதாவது தவறு செஞ்சுருந்தாங்கன்னா அதுக்கு சாரி கேட்க கூட டைம் ஆகும். இவங்க, இவங்களுக்குள்ளேயே முதல்ல ஆராய்ந்து பார்த்திட்டு அதன் பிறகு தான் பேசுவாங்க .
How to build self discipline??
ஆனா நம்ம பல பேர் “ஹப்பா இவங்க பயங்கர நெஞ்சழுத்தகாரங்க” அப்படின்னு தப்பா நினைச்சுருவோம். வேற ஒன்னும் இல்ல கொஞ்சம் இவர்களுக்கு டைம் எடுக்கும் எதுக்குமே .
7. அமைதியான நபர்களுக்கு பிரண்ட்ஸ் சர்க்கிள் பார்த்தீங்கன்னா கொஞ்சம் கம்மியா தான் இருக்கும். அதிக பிரண்ட்ஸ் வச்சுக்க அவங்க விருப்பப்பட மாட்டாங்க. கொஞ்சம் பிரண்ட்ஸ் இருந்தாலும் அவங்க கூட ரொம்ப நெருக்கமா இருப்பாங்க.
இனி ஒரு விஷயம் என்னன்னா இவங்க ரொம்ப நம்பிக்கைக்குறியவர்களாக இருப்பாங்க.
How to be good leader with tips and examples
8. இவங்களுக்கு நல்ல லீடர்ஷிப் குவாலிட்டி இருக்கும். ஆபிரகாம் லிங்கன் ரொம்ப சைலன்டான நபர்தான் ஆனா பல திறமைகளை கொண்டவர். எழுதுவது, பேசுவது, அந்த மாதிரி திறமை மிக்கவர் . அதுபோலவே நல்ல தலைவரும் கூட. அதே மாதிரி சைலன்டான நபர்களும் இவர்களுக்கு லீடர்ஷிப் கிடைச்சா நல்ல திறமையா செயல் படுவாங்க.
அடுத்தவங்க சொல்றத நல்ல கேட்டுட்டு பேசுவாங்க. மேடையில தன்னம்பிக்கையோட நல்ல தலைவராகவும் பேசுவாங்க.
இதுதான் அமைதியான நபர்களைப் பற்றி பொதுவான 8 குணங்கள்.