நீங்க உங்க வாழ்க்கையில
எடுக்கிற முயற்சிகள்ல வெற்றி பெறனும்னா
நீங்கள் உங்கள் முதல் எதிரியை
தோற்கடிக்கணும்.
அந்த எதிரி யார்னு நினைக்கிறீங்களா அதுதான் உங்கள் சோம்பேறித்தனம் சிறிய
அளவில் உள்ள சோம்பேறித்தனம் ஆயினும் அது உங்களோட வெற்றியை எளிதில் அடைய முடியாத
படி தடுத்துவிடும்! அது உங்களோட வளர்ச்சியை பாதிக்கும் …. பின் உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை பின்தள்ளி விடும்!
இந்த சோம்பேறித்தனத்தினால் அப்புறம் செஞ்சுக்கலாம்… அப்புறம் படிச்சுக்கலாம்…
அப்புறம் பாத்துக்கலாம் அப்படின்னு நீங்க விடுகிற சிறிய விஷயங்கள் … வாழ்க்கை பாதையவே மாற்றி இருக்கும்
எடுத்துக்காட்டாக : நீங்க பிளஸ் டூ படிக்கிறப்போ சோம்பேறித்தனத்தினால் அப்புறம் பாத்துக்கலாம் அப்படின்னு நினைச்சு விட்டிங்கனா அந்த சோம்பேறித்தனத்தினால் மார்க் கம்மியா ஆகிடும்.
ஒரு மார்க் வித்தியாசத்தில் நீங்க போக நினைச்ச காலேஜுக்கு போக முடியாம போயிடும். எத்தனை பிரண்ட்ஸ் கிட்ட கேட்டு பாருங்க உங்களுக்கு அந்த கதை தெரிய வரும் .
இதேதான் வேலையிலும் வாழ்க்கையிலும்…. அச்சச்சோ அப்ப சோம்பேறித்தனம் பாக்காம செஞ்சிருந்தா இப்படி இருந்திருக்க வேண்டாமே அப்படின்னு எத்தனை பேர் பொலம்புறோம்.
நாம் அந்த தவற செஞ்சிட்டு… நம் தோல்விக்கான காரணங்களை தேடி அடுத்தவர் மேல போடுவோம்!
யோசிச்சு பாருங்க இப்படி பல பேர் செஞ்சிருப்போம். அவங்களால …. இவங்களால…. அப்படின்னு சொல்லி நம் தவறை உணர்ந்திருக்க மாட்டோம்.
அரிஸ்டோட்டில் சொல்லி இருக்காரு We are what we repeatedly do நாம் இந்த சோம்பேறித்தனத்தினால்.. முடிக்க வேண்டிய வேலைகளை அப்புறம் அப்படின்னு மாற்றி வைக்க பழகிட்டிங்கனா அதுவே தான் நீங்க செஞ்சுட்டு இருப்பீங்க !!!
அற்புதமான வாழ்க்கை பாதையவே நீங்களும் அறியாமலே தொலைச்சிடுவீங்க!!!
அதனால சமயத்தை வீணாக்கமல் ப்ரொடக்ட்டிவா இருக்கணும்! அதனால வெற்றி அடையப் போவது நீங்கதான் வேற யாரும் இல்லை!!!
உங்களுக்கு தெரியுமா
பிரபலமான எழுத்தாளர் ஆகுறதுக்கு முன்னாடி ஹாரி பாட்டர் சீரிஸ் எழுதிய J.K. Rowling அவங்க தனிப்பட்ட வாழ்க்கையிலும் பண ரீதியாகவும்
ரொம்ப கஷ்டப்பட்டாங்க… கவர்மெண்ட் தந்த பைசாவில் தான் வாழ்ந்துட்டு வந்தாங்க..
நிறைய Rejections நிறைய பிரச்சனைகளை face பண்ணிட்டு இருந்தாங்க
எதற்கும் தளர்ந்து
போகாத
அந்த உழைப்பு… முயற்சிதான் அவங்கள இந்த நிலைமையில இப்போ முன்னேற்றி இருக்கு .. அவங்க சோம்பேறித்தனத்துல முயற்சி பண்ணாம
விட்டுருந்தாங்கன்னா இப்போ இந்த வளர்ச்சியை அவங்க அடைஞ்சிருப்பாங்களா ? ? ? கண்டிப்பாக இல்லை!!!
இப்போ வெற்றி படிக்கட்டில் நிக்கிற பலரையும் பார்த்து நாம ஏங்கி இருப்போம் .அவங்க யாருக்கும் இது சுலபமாக கிடைக்கல அதற்காக அவங்க முயற்சி பண்ணி இருந்தாங்க!!!
Spacex , Tesla போன்ற நிறுவனங்களின் Master brain ஆ செயல்படும் இலன் மாஸ்க் பல தோல்விகளை சந்தித்தவர் .சோம்பேறித்தனமாக அப்புறம் பாத்துக்கலாம்னு முடங்காம அந்தத் தோல்விகளை முறியடிச்சு இப்போ இந்த நிலையில் இருக்கிறார்.
சோம்பேறித்தனமாக அப்புறம் பாத்துக்கலாம்னு முடங்காம அந்தத் தோல்விகளை முறியடிச்சு இப்போ இந்த நிலையில் இருக்கிறார்.
இவங்களை எல்லாம் பார்த்து நாம கத்துக்க வேண்டிய ஒரு விஷயம் என்னன்னா முயற்சி ஒன்றுதான்.
நீங்க ஒரு விஷயத்தை
ஒற்றுக் கொள்ள வேண்டும். இன்று நீங்கள் அனுபவிக்கும் கஷ்டபாடுக்கு நீங்க முன்னாடி
எடுத்த அந்த தீர்மானங்கள் தான் காரணம்.! அதனாலதான் இன்று….. நாளை அப்படின்னு எல்லாம் ஒதுக்காதீங்க இன்று முதல் உங்களால்
முடிந்த முயற்சிகள் அனைத்தையும் தொடங்குங்கள் .
அதற்கான வெற்றியை உடனே எதிர்
பார்க்காதீர்கள் ஆனா மாற்றங்களை பார்ப்பீங்க. அப்போ ஒரு எதிரி வருவாங்க எல்லாரும்
ஜாலியா மொபைல் பாத்துட்டு டிவி பாத்துட்டு ஃப்ரீயா இருக்காங்க நான் மட்டும் ஏன்
ஓடணும் அப்படின்னு உங்கள் சோம்பேறித்தனம் அந்த மாதிரி ஒரு விதையை தூவும். அதுதான்
உங்க எதிரி அத தூக்கி எறிஞ்சிட்டு உங்க லட்சியத்தை நோக்கி போங்க அடுத்தவங்க அதே மொபைல்லயும் டிவிலயும் உங்களுடைய வெற்றியை காணட்டும் ..
சரிதானே!!!
எப்படி தொடங்குவது..??? இத்தனை நாள் முடங்கி போயிட்டோம் அப்படின்னு ஃபீல் பண்ணாதீங்க அதுக்கு ரெண்டு வழி இருக்கு
1.Mind set :
ஒரு பாசிட்டிவ் மைண்ட் செட் மனசுல இந்த நிமிஷமே கொண்டு வாங்க .இத்தனை நாள் போனது போகட்டும் இவ்ளோ நாள் ரெஸ்ட் எடுத்துட்டோம் அப்படின்னு நினைச்சுக்கோங்க இனி ஓடி ஜெயிக்கணும் அப்படின்ற மைண்ட் செட் ஃபர்ஸ்ட் உங்க மனசுக்குள்ள கொண்டு வாங்க. அதுதான் உங்க சோம்பேறித்தனத்தை முறியடிக்க போகும் பஸ்ட் விஷயம் நீங்கள் வெற்றி பெற்று வாழ்வது போல் நீங்களே உங்கள அடையாளப்படுத்தி மனசுக்குள்ள நினைச்சுக்கோங்க அந்த ஒரு பிக்சரை முன்னாடி வச்சுட்டு ஓட தொடங்குங்க !!!
2. Take action:
உங்க மைண்ட் செட் மாத்திட்டிங்கனா அப்புறம் Action தான். என்ன எடுத்த உடனே ஜெயிக்கணும்னு நினைச்சா அது கொஞ்ச கஷ்டம் . சோ கொஞ்சம் கொஞ்சமா முயற்சி பண்ணுங்க ஏன்னா சின்ன சின்ன படிக்கட்டில் ஏறுனாதான் மாடி என்ற வெற்றியை அடைய முடியும் அது மாதிரி உங்க வாழ்க்கையும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!